இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் திரைப்பட "காவாலா" முதல் சிங்கிள்..!

published 1 year ago

இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் திரைப்பட "காவாலா" முதல் சிங்கிள்..!

சினிமா :

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இதனிடையில் 'தலைவர் 170' படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். 'ஜெய் பீம்' படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியின் 'தலைவர் 171' படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. காவாலா எனத் தொடங்கும் ஜெயிலர் பட பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான 'காவாலா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியின் 'தலைவர் 171' படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe