கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை... வழக்கில் தீர்ப்பு...!

published 6 days ago

கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை... வழக்கில் தீர்ப்பு...!

கோவை: கோவை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை செய்யப்பட்டவரின் அண்ணன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட, வர்சினி பிரியா-கனகராஜ் காதல் தம்பதியினரை, கனகராஜின் அண்ணன் வினோத்குமார் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து வெட்டிக்கொன்றான்.

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தமிழகத்தையே உலுக்கியது. இந்த ஆணவக் கொலை வழக்கு விசாரணை பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதனிடையே, வழக்கை இன்று விசாரித்த நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவாளி மரண தண்டனை கொடுக்கும் அளவுக்குக் குற்றம் செய்துள்ளார் என்று தெரிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனையை ஜனவரி 29ம் தேதி அறிவிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe