2-வது மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போலீசார் விசாரணை

published 1 year ago

2-வது மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போலீசார் விசாரணை

கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்த 21 வயது இளம்பெண். இவர் பிளஸ் டூ வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

 சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம் பெண் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மாயமானார். 

இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண்ணுக்கு பொள்ளாச்சி கொல்லுபாளையத்தை சேர்ந்த ஏற்கனவே இரண்டு முறை திருமணமான 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபரின் இரண்டாவது மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 அப்போது வாலிபர் இளம்பெண்ணை அழைத்து திருமணமானதை மறைத்து அவரிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. தற்போது தலைமுறைவாக உள்ள இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe