திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது- கோவையில் சீமான் பேட்டி...

published 4 days ago

திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது- கோவையில் சீமான் பேட்டி...

கோவை: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமாம் செய்தியாளர்களை சந்திததார். அப்போது பேசிய அவர்,  நாம் தமிழர் கட்சியினர் சென்னை அறிவாலயத்தில் திமுகவில் இணையும் நிகழ்வில்,பெரியாரை தவறாக பேசக்கூடியவர்கள் இழி பிறவிகள் என்று துரைமுருகன் கூறியது பற்றி கேட்கும் போது,
அவர் என்னைச் சொல்லவில்லை பேரறிஞர் அண்ணா மற்றும் அவர்களுடைய தலைவர் கருணாநிதி பற்றி கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நாங்கள் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை.. திராவிடக் கழகத்திலிருந்து திமுக பிறந்ததற்கான காரணம் என்ன? அவரே கூறியிருக்கிறார்..
பெரியார் எங்க ஊரு வேலூருக்கு வந்தார், மணியமையை கூட்டிக்கொண்டு போனார், மணியம்மையை திருமணம் செய்தார், அதிலிருந்து அண்ணா வெளியே சென்றார்.. மணியம்மை மற்றும் பெரியாரின் திருமணத்தில் பிறந்தது தான் திமுக என்று கூறினார்..

கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில், நாங்கள் துளி கூட பேசவில்லை... அதனால் துரைமுருகன் அவர்கள் இருவரையும் தான் கூறுகிறார் என்னை சொல்லவில்லை.. சீமானை சொல்கிறேன் என்று அவர் சொல்லவில்லையே என்றார். இதை நான் வரவேற்கிறேன் என்றார்.

பிரபாகரன் குடும்பத்தில் இருந்தே புலிகள் தரப்பிலிருந்து சீமான் சொல்வது பொய் என்று கூறுகிறார்களே என செய்தியாளர் கேட்க,

பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது இலட்சிய உறவு தான், இலட்சிய உறவு என பார்த்தால் இந்த மண்ணில் முதலில் போராடி செத்தவன் தான்.. அவரின் இலட்சியத்திற்காக நிற்கிற நாங்கள் எல்லாரும் தான் அவரின் உறவு..
பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை, உலகெங்கும் இருக்கும் என் சொந்தங்கள் பதில் சொல்லிவிடுவார்கள் உங்களுக்கே தெரிய வரும் என்று கூறினார்.

கார்த்திக் மனோகரன் நீங்கள் பிரபாகரனை சந்தித்து இருந்தாலும் மதிவதனையை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறாரே என கேட்க,

நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை, ஒருவர் நான் பத்து நிமிடம் சந்தித்தேன் என்கிறார் ஒருவர் 8 நிமிடம் சந்தித்தேன் என்கிறார். ஒருவர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே பொய் என்கிறார். நீங்கள் எதை நம்புகிறீர்கள்? நான் எங்கள் அண்ணன் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று கூறுகிறேன்.. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என கேட்டார்..

செய்தியாளர் நீங்கள் A டீமா, இல்லை B டீமா என கேட்க...

நான் B டீம்தான் , ஏனென்றால் ஏ-டிமில் திமுக இருக்கிறது.. அதனால் நாங்கள் B டீமில் இருக்கிறோம்.
பிஜேபியின் A டீம் திமுக, B டீம் நாங்கள் என்று கூறினார்.

பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் பொய் என்று கூறுவதை, உண்மை என்ன என நிரூபிக்க ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை நீங்கள் ஏன் முன்மொழிவதில்லை என செய்தியாளர் கேட்க,

நான் யாருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, எனக்கு மற்றவர்களுக்காக நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை அவசியமும் இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை சந்திக்கவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

நீலாங்கரை பகுதியில், நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்களே எனக் கேட்க,

நாம் தமிழர் கட்சியினர் உருட்டுக்கட்டைகளோடு இருந்ததாக கூறுகிறார்கள், இதில் துப்பாக்கியை ஏன் விட்டீர்கள்.. துப்பாக்கி வெடிகுண்டு அனைத்தையும் இணைத்து வழக்கு போடச் சொல்லுங்கள் என சிரித்துக் கொண்டே கூறினார்.

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்து இருக்கிறார்கள் இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என செய்தியாளர் கேட்க,

டங்டன் சுரங்கம் ரத்து செய்யப்படும் என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். மக்களுக்கு என்று ஒரு படை இல்லை என்றால் மக்களுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல இல்லை.. இந்த மண்ணில் மக்களுக்கு என்று ஒரு படை இருக்கிறது... நாம் தமிழர் என்ற புரட்சி படை இருக்கிறது.. உன்னால் ஒரு படி மண்ணை கூட எடுக்க முடியாது என்று நான் அன்றே கூறினேன். தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பிஜேபி நிறுத்தியது என்றால் கொண்டு வந்தது யார்?.என்று கேள்வி எழுப்பினார்..

தொடர்ந்து பேசியவர், பெரியார் என்னென்ன பேசினார் என்பதை பேச வேண்டும், பெண்களுக்கு தாலி ஒரு அவமான சின்னம், அதை அருத்தறிய சொன்னார் நாங்கள் அருத்தெறிந்தோம்.  கற்பப்பை ஒரு அடிமை சின்னம், நீ பிள்ளை பிறக்கும் இயந்திரம் இல்லை, அதை அருத்தெறிய வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்., அதைக் கூற வேண்டும்.. கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, வணங்குகிறவன் அயோக்கியன், தமிழ் ஒரு சனியன், அதை விட்டொழியுங்கள் அது ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழ் பேசுகிறவன் முட்டாள். இதையெல்லாம் பெரியார் பெருமையாக பேசுகிறார் என்பதை பேச வேண்டும். துணிவு மிக்க ஆண் மக்கள், பெரியாரின் பெரும் தொண்டர்கள், வழிபாட்டாளர்கள், அங்கு வந்து பேச வேண்டும் சீமான் பெரியாரை திட்டி விட்டார், பெரியாரை இழிவாக பேசிவிட்டார்.. அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என அங்கு வந்து சொல்ல வேண்டும் என கூறினார்.. நீங்கள் சரியான வீரமிக்கு ஆண்மகனாக இருந்தால் பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும்.. அங்கு பெரியாரை விட்டுவிட்டு ஓட்டு கேட்டால் பிஞ்ச செருப்பை வைத்து பிச்சு புடுவேன் என கூறினார்.. தெரியாத எதிர்த்து தானே கட்சியை ஆரம்பித்தீர்கள், எந்த இடத்தில் உங்களுக்கு கொள்கைகள் இருக்கிறது.... ஆரிய ராஜாஜியின் துணை இல்லாமல் திமுக அரியணையில் ஏறியது . நீங்கள் என்ன ஆண்மக்கள் ஆரியரை எதிர்க்கிறீர்கள்... ஆரிய படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பேரன் நான்.. இந்தத் திருட்டு திராவிட படையை கடக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும் எனக்கு.. 32 இயக்கங்கள் சேர்ந்து ஒரு 150 பேரை கூட்ட முடியவில்லை, இதெல்லாம் ஒரு இயக்கம்... என்னுடைய தலைவனை எதிர்த்து 20 நாடுகள் சேர்ந்து சண்டையிட்டன.. இத்தனை கட்சியை கூட்டிக்கொண்டு ஒத்த பயலை உன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை என்று கூறினார்.


பிரசாந்த் கிஷோர் பாண்டே யார்? அவர் ஒரு பீகாரியா பிராமணர்.. அவரை ஏன் கூட்டி வந்தீர்கள்..

இங்கு எங்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார்,, அந்த பிரசாந்த் கிஷோர் பாண்டேவை விட 10 மடங்கு, 20 மடங்கு அறிவாளி ரங்கராஜ் பாண்டே..

இந்த பிரசாந்த் கிஷோர் பாண்டியவிற்கு தமிழ்நாட்டின் தெற்கு வடக்கு , ஆறு குளம் ஏரி சமூகம் பற்றி ஒன்றும் தெரியாது.. ஆனால் ரங்கராஜ் பாண்டேவுக்கு தெரியும்.. மூளை முக்கு முதற்கொண்டு தெரியும்.. அவரை வைத்து வேலை செய்யுங்கள் பார்ப்போம்... தற்போது ராபின் ஷர்மா என்ற ஒருத்தரை கூட்டி வந்திருக்கிறீர்கள்... அவர் யார் சூத்திரரா.. நிலை வைத்தியனா..

இல்லை நீங்கள் சொல்லக்கூடிய ஆரியன் தான்.. அந்த ராபின் ஷர்மாவுக்கு பதிலாக எங்கள் ஊரில் ஒருத்தர் இருக்கிறார்.. அவர் ஹரிஹர ராஜ ஷர்மா.. அவர்தான் எச். ராஜா.. அவர் ஒரு பேரறிஞர், அவருக்கு தமிழும் தெரியும் தமிழ் இலக்கியமும் தெரியும்.. இவங்களையெல்லாம் வைத்து ஒருமுறை வேலை செய்து பாருங்கள்.. அடிக்கிற அடியில் செவில் திரும்பி,Sv சேகர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்..
எஸ் வி சேகர் அப்பா பெயரை எதற்கு தெருவுக்கு வைக்கிறீர்கள்.. தமிழ் இலக்கியத்தை ஆவணத்தை சேர்த்து வைத்த எங்களின் தாத்தா சாமிநாத ஐயர் பெயரை வைக்கலாமே... மறைமலை அடிகளின் குரு ஒருத்தர் இருக்கிறார்.. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றி வைத்துக் கொண்ட பெருந்தகை அவரின் பெயரை வை... தமிழ் உலகில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய எங்களுடைய பாட்டன் பாரதியின் பெயரை வை... எதற்கு எஸ் வி சேகரின் அப்பா பெயரை வைக்கிறீர்கள்...

நீ சொன்னதை நாங்கள் நிறைவேற்றி கொடுத்து விட்டோம்... நாங்கள் சொன்னதை நீ நிறைவேற்றிக் கொடு என்று கூறுகிறீர்கள்.. அவன் சொன்னால் அவன் தெருவில் இருப்பவனே ஓட்டு போட மாட்டான்.. என்ன உளவுத்துறை வைத்திருக்கீர்கள்.. நல்ல சர்வே எடுத்து அறிக்கை கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்.

நீங்கள் தமிழை சனியன் என்று கூறிய பெரியாரை அடையாளமாக நிறுத்துகிறீர்கள்.. நாங்கள் தமிழ் மொழியை உயிர்மூச்சாக கொண்ட எங்கள் தலைவரை கோட்பாடாக வைத்திருக்கிறோம்.

அண்ட் பாலசிங்கம் அவரின் புத்தகத்தில், திராவிட புலிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் என கேட்க..

அவரின் கோட்பாடுகளும் உங்களின் கோட்பாடுகளும் வேறு மாதிரி இருக்கிறது என கேட்க..

அப்படி இருந்தால் ஏன் தமிழ் ஈழம் என்று வருகிறது.. இலங்கை ஈழம் என்று வந்திருக்கலாமே.. யாரும் வசதிக்கு பேசிக் கொள்ளக் கூடாது என்று கூறினார்..
50 ஆண்டுகளுக்கு வந்த  தமிழ்இரும்பை திராவிடம் துருப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தது.. அதைத் துடைத்து தமிழ் தேசியம் எரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழர்களா, திராவிடர்களா என்பதுதான் எங்களின் கேள்வி. தமிழர், தமிழ்,  தமிழக அரசியல் என்று பேசுவதே திராவிட எழுச்சிக்கு எதிரி என்று பேசுகிறார் தந்தை பெரியார்.. தமிழ் தமிழ் என்று பேசும் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெரியார் கூறுகிறார்.. அப்படியானால் அவர் யாரை சொல்கிறார்.. என் முன்னோர்கள் மொழிக்காக போராடி செத்திருக்கிறார்கள் என்றார்..

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்த கேள்விக்கு,

ஒன்னு கேக்குறேன், ஒரு லட்சம் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு மூன்று ஆண்டுகளில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் சொல்கிறார்.. அப்படியானால் இங்கு ஒரு லட்சம் போராட்டம் என்றால் ஒரு லட்சம் பிரச்சனைகள் இருக்கிறது.. யாராலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனைகளை தீர்த்து நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறியது யார்... அப்படி என்றால் இங்கு லட்சக்கணக்கான பிரச்சனைகள் இருக்கிறது மக்கள் போராடிக் கொண்டதாக இருக்கிறார்கள்... இந்த ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்த நீங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தங்கச்சிக்காக போராட வந்த எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை அனுமதி மறுத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.. பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் முன் நின்று போராடியதற்கு அனுமதி மறுத்தது ஏன்? என்னுடைய வீட்டை முற்றுகையிட்டு, என் படங்களை மூன்று மணி நேரம் அடித்து நொறுக்கு இருக்கிறார்கள்.. இதற்கு அனுமதி கொடுத்த அரசு ஏன் அண்ணா பல்கலை தங்கச்சிக்காக போராட அனுமதி கொடுக்கவில்லை..

சபாநாயகர், நடுநிலையாக இருந்து சபையை நடத்த வேண்டும்.. அதுதானே மரபு.. தமிழ்நாட்டின் சபாநாயகர் என் தம்பி ஞானசேகரன் என்று பேசுகிறார் என்றால்.. இதை எப்படி எடுத்துக் கொள்வது.. அதை ஏன் நீங்கள் எல்லோரும் கேள்வி கேட்கவில்லை? ஒரு சபையின் நாயகர் ஒரு அக்கியூஸ்டை என் தம்பி என்று கூறுகிறார் என்றால் எப்படி எடுத்துக் கொள்வது. எதைப்பற்றி பேச தான் நீங்கள் தகுதி நேர்மை வைத்திருக்கிறீர்கள். விமர்சனம், அவதூறு தவிர உங்களிடம் ஏதாவது இருக்கிறதா? ஆக்கபூர்வமான ஒரு கேள்வியை என்னை நோக்கி உங்களால் எழுப்ப முடியுமா?..

புதிதாக நாங்கள் பெரியாரைப் பற்றி ஏதாவது பேசுகிறோமா.. பெரியார் பேசியதை நாங்கள் எடுத்துக் கூறுகிறோம்,என்றார்.

நாம் தமிழர் தொடங்கியதிலிருந்து பெரியாரை பற்றி விமர்சிக்காமல், தற்போது ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்க...
இப்பொழுதுதான் தலை வலிக்கிறது, அப்போது தானே மாத்திரை போட்டுக் கொள்ள முடியும்.. அப்பொழுது அண்ணா கருணாநிதி எல்லாம் தவறு செய்தார்கள் என்று கூறுகிறீர்களா.. கருணாநிதி சட்டசபையிலே, இந்த கிழவனை என் தேசிய பாதுகாப்பில் கைது செய்யவில்லை என பக்தவச்சலம் ஆட்சியில் கேட்டார்... இதையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.... பெரியார் வழி நடந்த பாதை என்பதால் நான் அமைதியாகச் சென்றேன்... நீங்கள் எல்லா நோய்க்குமே பெரியார் தான் மருந்து என்று கூறும் பொழுது தான்... எங்களுடைய முன்னோர்கள் செய்த போராட்டத்தை மறைத்து ஒற்றை குறியீடாக நீங்கள் நிறுத்தும் பொழுது.. அதை உடைத்து நொறுக்க வேண்டிய கடமை பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.. பெரியார் தான் எல்லாமும் என்று நீங்கள் கூறும்போது அதை இல்லை என்று கூறுகிறேன்.. பெரியாரும் போராடினார் அதை ஏற்றுக் கொள்கிறோம்.. ஆனால் பெரியார் தான் போராடினார் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எதிர்ப்போம்..
பெரியார் ஒழிக என்பது என்னுடைய கோட்பாடு இல்லை.. பிரபாகரன் வாழ்க என்பது தான் என்னுடைய கோட்பாடு.. திராவிட மொழிகள் என்பது என்னுடைய கோட்பாடு இல்லை.. தமிழ் தேசியம் வெல்க வளர்க என்பதுதான் என்னுடைய கோட்பாடு.. ஹிந்தி ஒழிக என்பதும் எங்களுடைய கோட்பாடு இல்லை தமிழ் வளர்க என்பதுதான் எங்களுடைய கோட்பாடு.. அடுத்தவன் தாய் மொழியை அழிப்பதில் இருக்கக்கூடாது, என்னுடைய தாய் மொழியை பாதுகாப்பதில் தான் எங்களுடைய கோட்பாடு இருக்கிறது..

பெரியார் மீது பக்தி கொண்டவர்கள் தானே..முதல்வரையும் துணை முதல்வரையும், பார்க்காமல் பத்து நிமிடம் பெரியார் பற்றி பேச சொல்லுங்கள் பார்க்கலாம்.. பெரியாரைப் பற்றி பேசி பொதுத்தளத்தில் வாக்கு சேகரிக்க இந்த தலைவர்களுக்கு துணிவு இருக்கிறதா? என்று கூறினார்..

சீமானை அரசியல் அனாதை ஆக்காமல் விடமாட்டோம் என்று கூறுகிறார்களே என கேட்டதற்கு...

அனாதைகளா சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறதா? இல்லை தனித்து நிற்கக்கூடிய நான் அனாதையா?.. அனாத பயல பார்த்து ஏன் அரண்டு போய் திரிகிறீர்கள்? நான் பொதுத்தளத்தில் பிரபாகரனை பற்றி பேசி ஓட்டு கேட்கிறேன்.. நீ பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேளு.. யார்  பெரிய ஆள் என்பது தெரிந்த விடும்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்த செய்தியாளர் கேள்விக்கு..

கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்திற்கு விடிவு, ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe