12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

published 1 year ago

12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

12 ராசிகளுக்குமான இன்றைய (11ம் தேதி ) ராசிபலன்

மேஷம்

சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : பயணங்கள் ஏற்படும்.

பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கிருத்திகை : மாற்றமான நாள்.
---------------------------------------

ரிஷபம்

நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : தாமதம் உண்டாகும்.

ரோகிணி : பொறுமை வேண்டும்.

மிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும்.
---------------------------------------

மிதுனம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்களை செய்வீர்கள். துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும். அரசு வகை குழுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : திருப்தியான நாள்.
---------------------------------------

கடகம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூசம் : ஆர்வமின்மையான நாள்.

ஆயில்யம் : லாபம் மேம்படும்.
---------------------------------------

சிம்மம்

புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------

கன்னி

பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.
---------------------------------------

துலாம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : தெளிவு பிறக்கும்.

சுவாதி : நெருக்கம் உண்டாகும்.

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------

விருச்சிகம்

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். புதுவிதமான பயணங்களால் மாற்றமான சூழல் அமையும். கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : தெளிவு ஏற்படும்.

கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------

தனுசு

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மூலம் : புரிதல் ஏற்படும்.

பூராடம் : தொடர்பு அதிகரிக்கும்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
--------------------------------------

மகரம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும். 
---------------------------------------

கும்பம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான நவீன கருவிகளை கொள்முதல் செய்வீர்கள்.  எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

சதயம் : சுறுசுறுப்பான நாள்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும். 
---------------------------------------

மீனம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.

ரேவதி : ஏற்ற, இறக்கமான நாள்.
-------------------------------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe