சுந்தராபுரத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்; போலீசார் விசாரணை

published 1 year ago

சுந்தராபுரத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்; போலீசார் விசாரணை

கோவை: கோவையில் அரசு வளாகங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்லும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

கோவை சுந்தராபுரம் வஉசி காலணியைச் சேர்ந்தவர் மணி(73). தனியார் நிறுவன உரிமையாளர். இவரது வீட்டின் பின்புற வளாகத்தில் 2 சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நைசாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான 2 சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். 

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த மணி சந்தனமரம் கடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

----------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe