வெள்ளியங்கிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…

published 3 days ago

வெள்ளியங்கிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…

கோவை; கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவை மாவட்டம் பூண்டி பகுதியின் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மழையேற்றம் செய்வர்.

வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் உள்ள சுயம்புலிங்கத்தை வழிபட பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் மழையேற்றதற்காக வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் மழையேற்ற பயணத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்களான குடிநீர், உணவு, மருந்து பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எனவும், மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும் எனவும், அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பின்னரே மலையேற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலை சுற்றுதல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக மருத்துவ குழுவினரை அணுக வேண்டும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் பலர் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் நிலை தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe