வெள்ளலூருக்கு வரும் குப்பைகளின் அளவு குறைந்ததா? அதிகாரி விளக்கம்

published 1 year ago

வெள்ளலூருக்கு வரும் குப்பைகளின் அளவு குறைந்ததா? அதிகாரி விளக்கம்

கோவை: வெள்ளலூருக்கு வரும் குப்பைகளின் அளவில் தினமும் 100 முதல் 150 டன் வரை குறைந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது.

இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.

இக்கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக, ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. பயோ மைனிங் திட்டம் மூலம் தற்போது வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தினமும் 40 முதல் 60 டன் வரை குப்பைகள் அழிக்கப்படுகின்றன.

இதனிடையே மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்கள் மூலம் வெள்ளலூருக்கு வரும் மக்கும் குப்பைகளின் அளவு குறைந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சியில் 33 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்கள்  அதாவது நுண்ணுயிர் சிறு மறுசுழற்சி மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர்.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு தினமும் 440 டன் வரை மக்கும் குப்பைகள் வந்து கொண்டிருந்ததாகவும், மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்கள் மூலம் தற்போது 250 டன் மக்கும் குப்பைகள்தான் வருவதாகவும் தெரிவித்தனர். தினமும் 33 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்கள் மூலம் 100 முதல் 150 டன் வரை குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe