பி.எஸ்.ஜி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து  குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு

published 1 year ago

பி.எஸ்.ஜி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து  குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு

கோவை: இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்துக்குத் தீர்வு காணும் வகையில், பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காம்பஸ் ஆக்ட் அறக்கட்டளையுடன் இணைந்து, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சியை நடத்தியது.

கோவை பி.எஸ்.ஜி கலை மாற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சக்தி வாய்ந்த செய்திகளை வெளிப்படுத்தும் சிறந்த குறும்படங்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கல்லூரி துணை முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் கண்ணையன், துணை முதல்வர் அங்குராஜ், காட்சி தொடர்பு துறைத் தலைவர் ராதா முன்னிலை வகித்தனர்.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் தயாரித்த 33 குறும்படங்கள் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. தனிநபர்கள் மீதான தாக்கம் முதல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீது போதைப் பொருட்களின் பாதகமான விளைவுகள் என பல்வேறு கருப்பொருட்களை குறும்படங்கள் பேசின. 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப்பொருளில் இருந்து விலகி, போதையில்லா வாழ்வின் முக்கியத்துவத்தைத் திறம்பட உணர்த்திய மூன்று குறும்படங்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், "​​போதைப் பொருள் ஒழிப்புப் போராட்டத்தில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருளின் தீங்கு விளைவிக்கும் செல்வாக்கிற்கு இளைஞர்களையும், மாணவர்களையும் உருவாக்குவது மிக முக்கியம். இங்கு வந்திருக்கும் பங்கேற்பாளர்கள் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்து, தங்கள் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்." என்றார். 

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேசுகையில், "போதைப் பழக்கத்தால் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. போதைப்பொருட்களை அறவே தவிர்க வேண்டும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe