சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவம் : கோவை கலைஞரின் புது முயற்சி

published 1 year ago

சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவம் : கோவை கலைஞரின் புது முயற்சி

கோவை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்த கலைஞர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்த நாளை ஒட்டி கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் திமுக கட்சியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனைச் செய்வதற்கு சுமார் 3 மணி நேரமாகியதாக அவர் கூறியுள்ளார். அவர் வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் "கலைஞர் 100" என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

இவர் இதற்கு முன்னதாகவே பல்வேறு மைக்ரோ ஆர்ட்டுகளை (Micro Art) தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe