பேசுவதை நிறுத்திய காதலியை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது…

published 20 hours ago

பேசுவதை நிறுத்திய காதலியை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது…

கோவை: கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் வேலை பார்த்து வருகிறார்.

இவரும் அதை ஊரைச் சேர்ந்த வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 
உறவினர்களான இருவரும் பழகி வந்த நிலையில் இளம்பெண் கோவையில் வேலை கிடைத்ததால் இங்கு வந்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த வாலிபர் அவ்வப்போது இளம் பெண்ணடம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்து உள்ளார். 
இதற்கிடையே திடீரென இளம்பெண் வாலிபரிடம் பேசுவதை நிறுத்தி வட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் இருந்து வாலிபர் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு அவர் போனை எடுக்கவில்லை. 
இதனால் தன்னை விட்டு இளம்பெண் பிரிந்து சென்று விடுவார் என்ற பயத்தில் வாலிபர் இருந்துள்ளார்.

நேற்று நாகர்கோவிலில் இருந்து பஸ்ஸில் ஏறி கோவைக்கு வாலிபர் வந்து இளம்பெண்ணை பார்க்க முயன்றார். 
அவர் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு அருகில் சென்று அவரை நேரில் வரும்படி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணும் அவர் கூறிய இடத்திற்கு சென்றார். 
அப்போது அவர்களுக்குள் காதல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. என்னிடம் பேசாமல் ஏன் இருந்தாய் என இளம் பெண்ணிடம் கேட்டுள்ளார்.

காதலை கைவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக கூறி வாலிபர் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று இளம் பெண்ணை மீட்டனர்.

வாலிபர் சுஜித்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe