கோவை அரசு கலைக்கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா : 1593 பேர் பட்டம் பெற்றனர்

published 1 year ago

கோவை அரசு கலைக்கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா :  1593 பேர் பட்டம் பெற்றனர்

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில்  பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரிக்கல்வி இயக்குநர்  கீதா கலந்து கொண்டார்.  2018-2021 கல்வியாண்டில் பயின்ற 1205 பேர் இளநிலை பட்டமும், 2019-21 ,கல்வியாண்டில் பயின்ற 388 பேர் முதுநிலை பட்டமும் என மொத்தம் 1593 பேர் பட்டம் பெற்றனர்.

விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் கீதா பேசியதாவது :

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் 170 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நம் கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர்கள் அரசுப் பணியில் ஆட்சியாளர்களளாகவும், மருத்துவர்களாகவும், அமைச்சர்களாகவும்,
நடிகர்களாகவும், திரைப்பட இயக்குநர்களாகவும், நீதிபதிகளாகவும், கல்லூரி
மற்றும் பள்ளிக்கல்வியிலும், ராணுவம் மற்றும் காவல் துறையிலும், விளையாட்டு மற்றும் கலைத்துறையிலும் சிறந்து விளங்குகின்றனர்.

ஒரு கை ஓசை காட்டிலும் இரு கை ஓசையே வலிமை வாய்ந்தது. ரஷ்யாவில் கை தட்டல் என்பது ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. ஏனென்றால் பாராட்டுவது ஆரோக்கியத்திற்கும் உறுதுணை புரியும்.

இன்று பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் தலைமையாளர்களாகவும்,
ஆராய்ச்சியாளர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் அறிவியல் துறையில்
சிறந்த விஞ்ஞானிகளுக்கும் திகழ வேண்டும். பட்டம் பெற்றவர்கள் சமூகப்பொறுப்பாளர்களாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe