வெயிலுக்கு குட்டி குட்-பை சொல்ல கோவையில் தர்பூசணி; விலை?

published 7 hours ago

வெயிலுக்கு குட்டி குட்-பை சொல்ல கோவையில் தர்பூசணி; விலை?

கோவை: கோவையில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், வெப்பம் அதிகரித்து வருவதால், தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

கோவையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக குளுகுளு வென்று இருந்த கோவையில் தற்போது வெப்பம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அடுத்த வரப்போகும் மாதங்களில் எந்த அளவுக்கு வெப்பம் இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. கோவையைப் பொறுத்தவரையில் மார்ச் மாதத்தில் தான் கோடை என்ற நிலை மாறி பிப்ரவரி முதல் வாரத்திலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

காலநிலை மாற்றத்தால் முன்கூட்டிய கோடை வெப்பத்தால் தத்தளிக்கும் கோவையில், தற்போது பொதுமக்கள் களைப்பாற நுங்கு, தர்பூசணிப் பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இந்தாண்டு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், ஆரம்ப கட்டத்திலேயே கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் அல்லல்படும் வாகன ஓட்டிகள் சட்டென சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி, தர்பூசணிக் கடைகளில் ருசி பார்த்து, களைப்பாறிச் செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe