சுதந்திர தினத்திற்காக ஜொலித்த நம்ம கோவை | புகைப்படங்கள்

published 1 year ago

சுதந்திர தினத்திற்காக ஜொலித்த நம்ம கோவை | புகைப்படங்கள்

கோவை : கோவையே இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக ஜோலிக்கிறது.

சுதந்திர தின ஸ்பெஷல் லைட் நேற்று இரவு முதல் மாநகராட்சி விக்டோரியா ஹால் கட்டிடம் மற்றும் பந்தய சாலை மீடியா டவர் போன்ற இடங்கள் கண்ணை மிளர வைக்கும் வகையில் வண்ண விளக்குகளால் மின்னுகிறது.

கோவையில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழா  நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவிற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வண்ண விளக்குகள் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த சுதந்திர தின நாளில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன. கோவையில் 
மாநகர 700 போலீசாரும் புறநகரில் ஆயிரம் போலீசாரும் என 1700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தவிர  பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும்  அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் வழக்கமான வண்ண விளக்குகளுக்கு பதிலாக தேசியக்கொடி வடிவிலான விளக்குகள் மிளர விடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்பவர்கள் உற்சாகத்துடன் இந்த வண்ண விளக்குகளை பார்த்து சென்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe