கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

published 2 years ago

கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை:  கோவை மாவட்டத்தில் 193 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 465 தனியாா் பள்ளிகள் என 658 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும் 1,200-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலுள்ள மாணவா்களுக்கு முழு ஆண்டுத்தோ்வு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் (நேற்று) ஞாயிற்றுக்கிழமையுடன் கோடை விடுமுறை முடிந்தது. இதையடுத்து  மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முன்கூட்டியே பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் மாணவா்கள் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து மாணவர்கள் இன்று காலை உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். கட்டி தழுவிக் கொண்டனர். சில மாணவர்கள் பள்ளி முதல் நாள் என்பதால் 1 மணி நேரத்துக்கு முன்பே பள்ளிக்கு வந்தனர். பள்ளி மாணவர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் அணைவரும் முககவசம் அணிந்து வந்தனர்.  

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கீதா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கோவை, எஸ்.எஸ்.குளம், பேரூா், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இன்று முதல் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

பள்ளிகளில் முதல் வாரத்தில் மாணவா்களுக்கான புத்துணா்வு பயிற்சி, நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. அடுத்த வாரத்தில் இருந்து வழக்கமான பாடங்கள் நடத்தப்படும். பள்ளிகளில் கடந்த வாரமே தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளியில் கொரோனா வழிமுறைகளும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe