கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

published 1 year ago

கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை: பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி எஸ்.பி.,  சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு, அவரிடம் பேசி, அவரின் தற்கொலை எண்ணத்தை கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு எஸ்.பி., பெருமாள் மாற்றினார்.

 பின் அந்த நபரை அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். இதேபோல கோவில்பாளையம் பகுதியில், 600 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய நபர்களை போலீஸ்காரர் சுரேஷ் மடக்கி பிடித்தார். பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்திருந்த நபரை மாவட்ட எஸ்.பி.,யின் அதிரடிப்படையைச் சேர்ந்த போலீஸ்காரர் ரஞ்சித்குமார் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார்.  

பணியில் சிறப்பாக செயல்பட்ட இந்த மூன்று போலீஸ்காரர்களையும் நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe