மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை கொண்டு செல்ல கூடாது - கோவை ஆட்சியர்

published 1 year ago

மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை கொண்டு செல்ல கூடாது - கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18 அன்று கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு,  சிலை வைக்கும் அமைப்பினர்  காவல்‌ ஆணையரகம்‌ உள்ள இடங்களில்‌ உதவி காவல்‌ ஆணையரிடம்‌ மற்ற  இடங்களில்‌ சார்‌ ஆட்சியர்‌, வருவாய்‌ கோட்டாட்சியரிடம்‌ தடையின்மை சான்று பெற்று இருக்க வேண்டும்‌. சிலை நிறுவப்படும்‌ இடம்‌ தனியார்‌ இடமாக இருந்தால்‌ நிலஉரிமையாளரிடமிருந்தும்‌, அரசு புறம்‌ போக்காக இருந்தால்‌ சம்பந்தப்பட்ட துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ நெடுஞ்சாலை துறை ஆகிய அலுவலர்களிடமிருந்து  தடையின்மைச்‌ சான்று பெற்று இருக்க வேண்டும்‌.

சம்பந்தப்பட்ட காவல்‌ துறை அலுவலரிடம்‌ ஒலி பெருக்கிகள்‌  பயன்படுத்த உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்‌.  தீயணைப்பு -அலுவலரிடமிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளத் சிலை அமைவிடம்‌ தீ தடுப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்‌. தற்காலிக மின்‌இணைப்பு பெற தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மான கழகம்‌ துறையிடம்‌ ஒப்புதல்‌ கடிதம்‌ பெறப்பட வேண்டும்‌. நிறுவப்படும்‌ சிலைகள்‌ தூய களிமண்ணால்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌. 

சுற்றுச்‌ சூழலிற்கு மாசு ஏற்படுத்தக்கூடிய  பிலாஸ்டர்‌ ஆப்‌ பாரீஸ்‌,  தடைசெய்யப்பட்ட பொருட்களான வண்ணங்கள்‌ பூசப்பட்ட சிலைகள்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு. வாரியத்தால்‌ தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு சிலைகள் அமைக்கக்கூடாது. எளிதில்‌ நீரில்‌ கரையக்கூடிய நச்சு அல்லாத இயற்கை  வண்ணங்களை பயன்படுத்துதல்‌ வேண்டும்‌. ரசாயன சாயங்களை பயன்படுத்தக்‌ கூடாது.
சிலையமைப்பாளர்கள்‌  பந்தல்‌ அமைப்புகளை அமைக்க எளிதில்‌ தீ பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் சிலையமைப்பாளர்கள்‌  பந்தல்‌ அருகே தற்காலிக முதல்‌ உதவி  மற்றும்‌ அவசரகால மருத்துவ வசதிகள்‌ இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்‌. வழிபாட்டு பகுதிகளை சுற்றி எளிதில்‌ தீப்பற்றக்கூடிய பொருட்கள்‌ இருப்பதை தவிர்த்தல்‌ வேண்டும்‌.

நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்படவுள்ள சிலைகளின்‌ உயரம்‌ தரை தளத்தில்‌ இருந்து 10 அடிக்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ பிற மத வழிபாட்டுத்‌ தலங்களுக்கு அருகில்‌ சிலைகள்‌ அமைப்பதை தவிர்த்தல்‌ வேண்டும்‌. கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மாறாக பெட்டி வகை ஒலி பெருக்கிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் சிலை நிறுவப்பட்ட இடங்களில் போதிய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை தீ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தீயணைப்பு துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள்‌ மினி லாரி மற்றும்‌ டிராக்டர்‌  ஆகியவற்றில்‌ சிலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மாட்டு வண்டி, மீன்‌ வண்டி மற்றும்‌ மூன்று சக்கர வாகனங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை. விநாயகர்‌ சிலைகளை சுமந்து செல்லும்‌ வாகனத்தில்‌ பயணம்‌ செய்யும்‌ பங்கேற்பாளர்களின்‌ எண்ணிக்கை மோட்டார்‌ வாகனச்‌ சட்டம்‌ 1988-க்கு உட்பட்டிருக்க வேண்டும்‌.

விநாயகர்‌ சிலைகள்‌ நிறுவப்பட்ட இடங்கள்‌ மற்றும்‌ ஊர்வலமாக கொண்டு செல்லும்‌ பாதைகளில்‌ பட்டாசு வெடிபொருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. சிலைகளை நீரில்‌ மூழ்கடிப்பதற்கு முன்பாக மலர்கள்‌, துணிகள்‌ மற்றும்‌ அலங்கார பொருட்கள்‌, பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ போன்றவற்றை தனியாக பிரித்தல்‌ வேண்டும். மேலும், பொது அமைதி, பாதுகாப்பு மற்றும் சமுதாய நல்லிணக்கத்திற்காக வருவாய் துறை,/காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறும் நிபந்தனைகளை கடைபிடித்து விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe