கோவை மக்களே குளத்தின் மேல் பறக்க ரெடியாகுங்க..! வந்தாச்சு ஜிப் லைன் சைக்கிளிங்

published 1 year ago

கோவை மக்களே குளத்தின் மேல் பறக்க ரெடியாகுங்க..! வந்தாச்சு ஜிப் லைன் சைக்கிளிங்

கோவை: கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் “ஜிப் லைன் ஜிப் சைக்கிள்” ரைடு சோதனை ஓட்டம் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 7 குளங்கள் மற்றும் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  ஒரு பகுதியாக குளத்தின் மேற்கு கரையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிளிங்” ரைடு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிரைவடைந்த நிலையில் இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் இன்று நடைபெற்றது. 

ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளிலில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செயது கேட்டறிந்தார். இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே 200 மீட்டர் தொலைவு மற்றும் தண்ணீர் மேல் செல்லும் முதல் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் ரைடு கோவையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe