கோவையில் நீதிமன்றத்திற்கு வந்தவர்களை கொலை செய்ய முயற்சி... பட்டப்பகலில் 6 கும்பல் துணிகரம்

published 1 year ago

கோவையில் நீதிமன்றத்திற்கு வந்தவர்களை கொலை செய்ய முயற்சி... பட்டப்பகலில் 6 கும்பல் துணிகரம்

கோவை: கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த நித்திஷ், கார்த்திக்.

இவர்களில் ரஞ்சித் மற்றும் நித்திஷ் மீது ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக ரஞ்சித், நித்திஷ், ஆகியோர் ஒரு பைக்கில் இன்று காலை  நீதிமன்றத்திற்கு வந்தனர்.

துணைக்கு அவரது நண்பர் கார்த்திக் வந்துள்ளார். பின்னர் அவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மீண்டும் பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நஞ்சப்பா ரோட்டில் சென்ற போது 2 பைக்குகளில் சரவணம்பட்டியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்தனர்.

இதனைப் பார்த்த 3 பேரும் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஆட்டோவில் ராம் நகருக்குள் நுழைந்தனர். ஆட்டோ ராமர் கோயில் அருகே உள்ள வங்கி முன்பு சென்றபோது அந்த கும்பல் 3 பேரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்ட முயன்றனர்.

இதில் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். அரிவாள் வெட்டில் நித்திஷ், ரஞ்சித் ஆகிய இருவருக்கு கை மற்றும் காலில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அவர்கள் தப்பித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கிருந்தவர்கள் அரிவாளால் வெட்டிய கும்பலை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் பொது மக்களையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். அரிவாள் வீட்டில் காயமடைந்த ரஞ்சித் நித்திசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 6 பேர்  கும்பலை தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் ரஞ்சித், நித்திஷ் மீது கோவை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe