நம்ம ஊரு புது கலெக்டரின் குவாலிபிகேஷன் தெரியுமா?

published 2 days ago

நம்ம ஊரு புது கலெக்டரின் குவாலிபிகேஷன் தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பவன்குமார் க.கிரியப்பவனரின் ஊர், கல்வி, முந்தைய பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

கோவை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும் கிராந்தி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பவன்குமார் க. கிரியப்பவனர், கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவன்குமார் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். PES பல்கலைக்கழகத்தில்  எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பயின்றவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வான இவர், முதன்முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றினார்.

அதன் பிறகு மத்திய தொழிலாளர் நலத்துறையில் உதவி செயலாளராகவும், 2018 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட சார் ஆட்சியராகவும், 2019 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராகவும் பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை கடலூரில் புறநகர் வளர்ச்சித்திட்ட  கூடுதல் கலெக்டராக பணியாற்றினார்.

பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தலைமைச் செயலாளரின், இணை செயலாளராக பணாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பவன்குமார் கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் பொறுப்பேற்க உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe