கரும்புக்கடையில் கும்பலாக வந்து பைக்குகளை திருடிச்சென்ற நபர்கள் - சிசிடிவி காட்சிகள் உள்ளே..!

published 1 year ago

கரும்புக்கடையில் கும்பலாக வந்து பைக்குகளை திருடிச்சென்ற நபர்கள் - சிசிடிவி காட்சிகள் உள்ளே..!

கோவை: கரும்புக்கடை பகுதியில் இரண்டு விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகர் கரும்புக்கடை பகுதி MCR வீதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான சன்பர். இவர் விலை உயர்ந்த பைக்கை வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றுமுன் தினம் இரவு பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அப்பகுதியில் சுற்றி திரிந்த ஐந்து இளைஞர்கள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் எலக்ட்ரிசியன் முகமது இஸ்மாயில் என்பவரது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர்.

 

 

இதனை தொடர்ந்து நேற்று காலை இருவரும் வெளியில் வந்து பார்த்த போது அவர்களது வாகனங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் வாகனங்களை தேடிய அவர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஐந்து இளைஞர்கள் அவர்களது பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் அண்மை காலங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்

https://youtu.be/Tf2YbQBgMlY?si=WjIZzI6tZXdU36VQ

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe