வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பணங்கள் SBI வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஒப்படைப்பு...

published 1 year ago

வருமான வரித்துறை சோதனையில்  பறிமுதல்  செய்யப்பட்ட நகைகள் பணங்கள் SBI வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஒப்படைப்பு...

கோவை: வருமான வரித்துறை சோதனையில்  பறிமுதல்  செய்யப்பட்ட நகைகள் பணங்கள் SBI வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை சோதனையில் 
பறிமுதல்  செய்யப்பட்ட நகை,பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஏழு அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் ஒப்படைத்தனர்.

கோவை  கட்டுமான நிறுவனத்தில்  வடவள்ளி சாய்பாபா காலனி, ராமலிங்கம்  காலனி இடங்களில் 3 நாட்களாக  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அதில் சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கட்டுமான  நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 
சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல்  செய்யப்பட்ட நகை,பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஏழு அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் ஒப்படைத்தனர்.

இதில் எவ்வளவு பணம் நகை உள்ளது என்பது இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe