அண்ணா நினைவு நாள்- கோவையில் திமுக அமைதி பேரணி...

published 1 day ago

அண்ணா நினைவு நாள்- கோவையில் திமுக அமைதி பேரணி...

கோவை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் அண்ணாவின் சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை திமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அண்ணாவின் புகைப்படத்தை ஏந்தியபடி சென்றனர்.

காந்திபுரம் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலை முன்பு பேரணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு திமுகவினர் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe