எல்லாம் முடிஞ்சு போச்சு- கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்...

published 1 year ago

எல்லாம் முடிஞ்சு போச்சு- கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்...

கோவை: எல்லாம் முடிஞ்சு போச்சு என கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று  கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில்  பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார்.  பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் , நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். அதில் முத்ரா திட்டம்,ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவையின்  வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்க வில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கபட்டது என தெரிவித்தார்.

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களான  பொள்ளாச்சி ஜெயராமன் , அமல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர்  முழுக்க முழுக்க  தொகுதி பிரச்சினைகளுக்காக நிதியமைச்சரை  சந்தித்தனர் என கூறிய அவர் இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்றார்.

கோவையில் SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் எனவும்,  எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் 
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை எனவும் , கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம், காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை என கூறினார். மேலும் கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்ததாகவும், அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும்,
தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.  கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் என கூறிய அவர், நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என கூறிய அவர்
மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.

அவரிடம் அதிமுக கூட்டணி குறித்து விபி துரைசாமி பேசுயது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் எல்லாம் முடிஞ்சு போச்சு என பதிலளித்தவாறு சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe