⁠⁠⁠⁠கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்- கோவையில் தொடரும் சம்பவம்…

published 13 hours ago

⁠⁠⁠⁠கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்- கோவையில் தொடரும் சம்பவம்…


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் தனியாக வீடு எடுத்தும் தங்கி கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மணிசங்கரன்(21). இவர் தனது நண்பர்கள் சிலருடன் கோவை சுந்தராபுரம் காந்திநகரில் வீடு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர்களது பக்கத்து அறையில் தங்கியிருக்கும் வேறொரு கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் அடிக்கடி மணிசங்கரன் மற்றும் அவரது நண்பர்களை கேலி, கிண்டல் செய்து உள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்தது. இந்நிலையில், நேற்று மணிசங்கரன் வீட்டில் லேப்டாப்பில் படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் 6 பேர், வீட்டுக்குள் நுழைந்து மணிசங்கரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி பைப், டியூப் லைட் மற்றும் கத்தியால் தாக்கினர். தடுக்க முயன்ற மணிசங்கரனின் நண்பர்கள் சுசீல் மற்றும் கார்த்திகேயனையும் தாக்கினர். இதில் அவர்களுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 6 பேரும் அவர்களை மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.

 காயமடைந்த சிவசங்கரன், சுசீல், கார்த்திகேயன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீசார் கல்லூரி மாணவர்கள் அஜய், தனுஷ், தினேஷ், துரைபாலன், ஹரிபிரசாத் மற்றும் சாய் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 இதேபோல், சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டியில் கேசவன்(19) என்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்டார். இதில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் இதுபோல், அடிக்கடி கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe