2023-24ம் ஆண்டிற்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- பரிசு தொகை எவ்வளவு தெரியுமா…

published 1 year ago

2023-24ம் ஆண்டிற்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- பரிசு தொகை எவ்வளவு தெரியுமா…

கோவை: தமிழ் வளர்ச்சித் துறையால் 2023-24 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண் குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கு கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718 என்ற அலுவலகத் தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், பழைய கட்டடம் - முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் என்ற முகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe