கோவையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக ஆர்ப்பாட்டம்...

published 6 hours ago

கோவையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக ஆர்ப்பாட்டம்...

கோவை: கோவையில் சி.ஐ.டி.யூ கோவை ஜில்லா சுமைதூக்கும் பொது தொழிலாளர்கள் சங்கம்  சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி சட்டம் இயற்றிட வேண்டும்.
சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த‌ வேண்டும். சரக்கு பரிவர்த்தனை வரியில் 2 % நலவாரிய நிதியை உருவாக்கிட வேண்டும். ஒன்றிய - மாநில அரசு குடோன்கள். ரயில்வே கூட்செட் தனியார் குடோன்கள், டிரான்ஸ்போர்ட் மற்றும் டாஸ்மாக் குடோன்களில் வேலை செய்யும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., இ.பி.எப். போன்ற சட்ட சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கிடு செய்ய வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 50 க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe