கோவையில் பிரமிக்க வைக்கும் வகையில் விண்வெளி கண்காட்சி!

published 1 year ago

கோவையில் பிரமிக்க வைக்கும் வகையில் விண்வெளி கண்காட்சி!

கோவை: உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கல்லூரி  நிர்வாகம் சார்வில் காண்போரை பிரமிக்க வைக்கும் விதமாக விண்வெளி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்தும் உலக நாடுகள் விண்வெளியில் செய்துள்ள சாதனைகள் மற்றும் மேற்கொள்ள இருக்கும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10 ம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விண்வெளி சார்ந்த கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விண்வெளி கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியை மேக் நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் கண்காட்சியினை  ரிப்பன் வெட்டி  துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் விண்வெளி தொடர்பான விளக்கங்கள், விண்வெளிக்கு இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்களின் மாதிரிகள், ராக்கெட்டுகளின் மாதிரிகள், விண்வெளியில் இதுவரை அறியப்பட்ட கோள்கள் மற்றும் துணைக்கோள்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாணவ மாணவியர்கள் நேரடியாகக் கலந்துரையாடினர். விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து விண்வெளியை மையமாக வைத்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், வினாடி வினா, எழுத்து போட்டி, பேச்சு போட்டி, நேரடி மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற்றது

நாளை (7ம் தேதி) வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாவகவும், தினமும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe