எல்.சி.யு கனெக்ட் பன்னிட்டாரு... லியோ திரைப்படம் பார்த்த கோவை ரசிகர்கள் உற்சாக பேட்டி!

published 1 year ago

எல்.சி.யு கனெக்ட் பன்னிட்டாரு... லியோ திரைப்படம் பார்த்த கோவை ரசிகர்கள் உற்சாக பேட்டி!

கோவை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியானது.

லியோ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளால் விஜய்
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்  லோகேஷ் கனகராஜ் தனது எல்.சி.யு பாணியில் இந்த படத்தை இயக்கியுள்ளாரா? இல்லையா? என்பதை தெரிந்தது கொள்ள பலரும் ஆர்வமா இருந்த நிலையில் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் வழக்கமாக மேள தாளம் முழங்க விஜய் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, படத்தின் போஸ்டர் முன்பு நடனமாடி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு எந்தவித கொண்டாட்டாட்டத்திற்கும் அனுமதி இல்லாததால் ரசிகர்கள் கட்டுப்பாடுகளோடு படம் பார்த்தனர்.

திரைப்படம் படம் பார்த்த ரசிகர்கள் கூறியதாவது:

திரைப்படத்தில் விஜயின் நடிப்பு இயல்பாகவும், அருமையாகவும் உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பணியை அருமையாக செய்துள்ளனர். அனிருத் இசை நேர்த்தியாக அமைந்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு- கனெக்ட் செய்துள்ளார். படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும்.

இவ்வாறு ரசிகர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe