முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் பணி துவக்கம்…

published 1 year ago

முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் பணி துவக்கம்…

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் பெறும்பவர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஷர்மிளா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு கோயம்புத்தூர் தெற்கு பகுதியை சேர்ந்த 1712 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 5526 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், கோயம்புத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த 3499 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 9777 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 4302 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 9893 பயனாளிகளுக்கு இலவச
சேலைகளையும், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 5150 பயனாளிகளுக்கு
இலவச வேட்டிகளையும், 11565 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும்,
வால்பாறை பகுதியை சேர்ந்த 2787 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 5275 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், சூலூர் தெற்கு பகுதியை சேர்ந்த
3224 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 8851 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், அன்னூர் பகுதியை சேர்ந்த 2585 பயனாளிகளுக்கு இலவச
வேட்டிகளையும், 6404
பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 1905 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 4662 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், பேரூர் பகுதியை சேர்ந்த
4016பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும். 11593 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும், மதுக்கரை பகுதியை சேர்ந்த 2470 பயனாளிகளுக்கு இலவச
வேட்டிகளையும், 7368 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும் ஆனைமலை பகுதியை சேர்ந்த 2894 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளையும், 7432 பயனாளிகளுக்கு இலவச சேலைகளையும்,
என  மொத்தம் 34,544
வேட்டிகளையும், 88,346 சேலைகளையும் பயனாளிகளுக்கு கோயம்புத்தூர்
மாவட்டத்தில் வழங்கும் பணியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். 

இவர் வருகின்ற 06.11.2023 தேதிக்குள், அனைத்து
பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe