தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு…

published 1 year ago

தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது-  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு…

கோவை: தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என   மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும்  இல்லை,Textile தொழில் நலிவடையும் சூழலுக்கு காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு,வீடுகளுக்கும் 3 மடங்கு  மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.ஜவுளி துறை வேலை நிறுத்தத்த முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.ஏற்கனவே வேங்கை வயல் விவகாரதில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால் இன்று நெல்லையில் வன்கொடுமை நடந்து இருக்காது.பொருளாதாரம் குறைவாக உள்ளது என்று எல்லாம் ஒரே சமுதாயம் சார்ந்தவர்களையும் வெட்டி கொள்கிறார்கள்.யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கி உள்ளன.தொழில் துறையினருக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பாஜக வினர் மீது வழக்குகள் போட்டாலும் இன்னும் வேகமாக வேலை செய்வார்கள்.

அனுப்பும் கோப்புகளை எல்லாம் கண்ணை மூடி கை எழுத்து போடுவது ஆளுநர் வேலை இல்லை.ஆளுநர் எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு விட்டால் இவர்களுக்கு நல்லவர்கள்.கவர்னர் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசியவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.கவர்னரை மிரட்டும் வகையில் எல்லாம் வேலை செய்தால் எடுபடாது.குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.மத்திய பிரதேசத்தில் மின் கட்டணம் எல்லாம் குறைவு.தொழில் துறையை ஊக்குவிக்க தவறுகிறது தமிழ் நாடு அரசு.

மத்திய அரசு கொடுக்க வேண்டியவற்றை முறையாக கொடுத்து வருகின்றனர்.தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா அரசும் தமிழக அரசும் செய்கிறது.கவர்னர்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.கவர்னரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதெல்லாம் கவர்னரை மிரட்டி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது அவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe