எண்ணெய் பொருட்களில் தீப்பிடித்தால் இப்படித்தான் அணைக்க வேண்டும்..! இதை செஞ்சுடாதீங்க..!

published 1 year ago

எண்ணெய் பொருட்களில் தீப்பிடித்தால் இப்படித்தான் அணைக்க வேண்டும்..! இதை செஞ்சுடாதீங்க..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக தீயணைப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலுக்கு செல்லும் தீயணைப்புத்துறையினர் அங்கு மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையை செய்து காண்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் எண்ணெய் பொருட்களில் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்த செயல்முறை விளக்கம் மாணவர்கள் மத்தியில் செய்து காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத்துறை அலுவலர் ரவிக்குமார் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது:

எண்ணெய்யின் மேற்பரப்பு அல்லது எண்ணெய் பொருட்களில் தீப்பிடித்தால் முதலில் அதற்கு செல்லும் ஆக்சிஜனை நிறுத்த வேண்டும். தண்ணீர் ஊற்றி அணைக்கக்கூடாது. தண்ணீரை ஊற்றினால் தீ இன்னும் அதிகமாகும். எனவே தீப்பிடித்த இடத்தின் மீது ஈர சாக்கு அல்லது அடர்த்தியான ஈர துணியை உபயோகித்து தீயை அணைக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனே பதட்டப்படக்கூடாது. பதட்டம் இல்லாமல் தீயை கையாண்டு அணைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe