ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் என்னென்ன..? பட்டியல் வெளியீடு

published 1 year ago

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் என்னென்ன..? பட்டியல் வெளியீடு

கோவை: கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது. இதனிடைய அந்த கடையில் என்னென்ன நகைகள் கொள்ளை போனது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட இங்கு தங்க நகை, வைரம், பிளாட்டினம், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவற்றில் பொருத்தி இருந்த ஏசி வென்டிலேட்டரை கழட்டி அதன் வழியே உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கடையை திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏசி வெண்டிலேட்டரை கழட்டி அதன் வழியே புகுந்து தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஊழியர்கள் கடை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர் அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்துக்கு கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

மேலும் மோப்பநாய்,  தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ஏசி வெண்டிலேட்டர் கழட்டி உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கொள்ளை போன நகைகளின் பட்டியல் விவரங்கள் வெளியாகி உள்ளன.

டைம்ண்ட் நகைகளின் விவரங்கள்

8 மோதிரங்கள், 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி  ஸ்டட்கள், 1 டாலர்


பிளாட்டின நகைகளின் விவரங்கள்

2 சைன்கள், 12 ப்ரேஸ்லெட்கள்


தங்க நகைகளின் விவரங்கள்

35 செயின்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நக்லஸ்கள், 30 கல் பதிந்த நக்லஸ் நகைகள் , 27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் சைன்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள், 18 தாலிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 சைன் (18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்)

மொத்தம் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கொள்ளை சம்பவத்தில் IPC 454, 457, 380 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து 5 தனிப்படை போலிசார் விசாரணையில் களமிறங்கியிருக்கின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe