வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தனியார் பள்ளி ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் மோசடி...

published 1 year ago

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தனியார் பள்ளி ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் மோசடி...

கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த ஏஜென்சி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் பண்ருட்டியை சேர்ந்தவர் லியோராஜ் (42). தனியார் பள்ளி ஆசிரியர். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து, கோவை வடவள்ளியில் உள்ள ஏஜென்சியை அணுகினார். அப்போது அதன் உரிமையாளர் பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த கோகிலா(35), என்பவர் வெளிநாட்டு வேலைக்கு விமான செலவு, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றுக்கு ரூ.2.50 லட்சம் செலவாகும் எனவும், டெல்லி வரை செல்லும் செலவை நீங்களே பார்த்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து லியோராஜ் கோகிலாவின் வங்கி கணக்கிற்கு ரூ.2.50 லட்சம் அனுப்பினார். அதன்பின்பு டெல்லி சென்றார். அங்கு விமானநிலையத்தில் வெளிநாடு செல்வதற்காக காத்திருந்தார். கடைசி நேரத்தில் அவரது விமான டிக்கெட் கேன்சல் ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து லியோராஜ், கோகிலாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலை என கூறி ரூ.2.50 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. இதேபோல், கோகிலா பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து லியோராஜ் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வேலை வாய்ப்பு ஏஜென்சி உரிமையாளர் கோகிலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe