தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

published 1 year ago

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வெள்ளத்தால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் விதமாக முப்பது லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

கோவை சுகுணாபுரம் மையில் கல் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக மதுக்கரை நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான, போர்வைகள், பிஸ்கட்கள், ரொட்டிகள், குடிதண்ணீர் மற்றும் அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண பொருட்களை கோவை சுகுணாபுரம் மையில் கல் பகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் கழக தொண்டர்களும் உடன் பயனித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணபொருட்களை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ தாமோதரன், முன்னாள் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மதுக்கரை நகரக் கழகச் செயலாளர் சண்முகராஜா, மற்றும் கோவை புறநகர்  தெற்கு மாவட்ட விவசாயிகள் பிரிவு செயலாளர் மகாலிங்கம் உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe