பேருந்து ஸ்ட்ரைக்.. கோவை, திருப்பூர், ஈரோட்டில் என்ன நிலை..?

published 1 year ago

பேருந்து ஸ்ட்ரைக்.. கோவை, திருப்பூர், ஈரோட்டில் என்ன நிலை..?

கோவை: போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் கோவை, ஈரோடு, திருப்பூரில் 90 சதவீததத்திற்க மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை கோட்டத்தில் மொத்தம் 951 பஸ்கள் உள்ளன. உக்கடம், சுங்கம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.

மீதமுள்ள பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகம் (கோவை மண்டலம்) அதிகாரிகள் கூறுகையில், ‘எல்பிஎப் தொழிற்சங்கம் மற்றும் இதர வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள், நடத்துனர்களை வைத்து முழுமையாக பஸ் இயக்கப்படும்.

வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்கள் பட்டியல் பெறப்பட்டு அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்கள் வைத்து இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’.என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe