கோவை: விமான நிலையத்தில் நேற்று இரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பாஜக தலைவர்கள் மற்றும் சகோதர இயக்க நிர்வாகிகள் ஒன்றாக சந்தித்து பேசுவது வழக்கம் என்ற அடிப்படியில் கோவையில் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.திமுகவின் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்த பெண் இன்று ஊடகங்களிடம் பேசி இருக்கின்றார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அவரை சிகரெட்டால் சூடு வைத்தார் என்றும், 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்தாகவும் தெரிவித்து இருக்கின்றார் எனறும் திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டில் இது நடந்துள்ள நிலையில் இது தொடர்பாக இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் பா.ஜ.க சார்பில் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாகவும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நாளை பிரதமர் துவக்கி வைக்கும் பிரதமர் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.பிரதமர் அயோத்தி செல்வதற்காக 11 நாள் சிறப்பு விரதம் இருக்கும் நிலையில் ராமாயணம் மற்றும் ராமர் தொடர்புடைய இடங்களுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அந்த வகையில் ஸ்ரீரங்கம்,
ராமேஸ்வரம் செல்கின்றார்., அடுத்தநாள் கோதண்ட ராமர் கோவில் சென்று விட்டு அங்கிருந்து அயோத்தியா செல்கின்றார் என்றும் தெரிவித்தார்.மேலும் இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கின்ற பக்தி கலந்த மரியாதை மற்றும் மக்கள் மீதான அன்பை காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.அயோத்தி ராமர் கோவில் விழாவை பொறுத்த வரை அந்தந்ந மாநிலங்கள் விடுமுறை குறித்த முடிவு செய்கின்றன எனவும் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், தமிழக
மக்கள் இதை பெரிய அளவில் வரவேற்பதுடன் தமிழகத்திலிருந்து முக்கியமான நபர்கள் அயோத்தியா செல்கின்றனர் என்றும் கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு முதல்வருக்கு இராமாயண புத்தகம் பரிசாக கொடுக்கிறார் அதே வேளையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவில்களை இடித்து பின்னர் மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு வந்த பின் இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியதுடன்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர், நீதிமன்ற அனுமதி கொடுத்து தான் ராமர் கோவில் கட்டப்படுகின்றது எனவும் உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழக ஆளுநர் பெருமாள் கோவில் சென்று சுத்தப்படுத்தி மக்களுக்கு எடுத்துகாட்டாக இருப்பதாகவும் மாநில அரசு சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் ஆளுநர் வரம்பு மீறியதாக உச்ச நீதிமன்றம் எங்கும் சொல்லவில்லை என்றும் கூறினார். திமுக பைல்ஸ் போல அதிமுக பைல் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு,'மொத்தம் ஒன்பது பைல்கள் வெளியான பின்பு மீடியா முன்னர் தெளிவாக தெரியபடுத்துகின்றோம் என்றும் 2ஜி வழக்கில் என்ன நடந்து இருக்கின்றது என்ற டேப் வெளியிட்டு இருக்கின்றோம்.திமுக இந்த டேப்பிற்கு பதில் சொல்ல வேண்டும்., முதல்வரின் தனிப்பட்ட உதவியாளரும் இந்த டேப்பில் பேசி இருக்கின்றனர்.,மக்கள் மன்றத்தில் 9 டேப்பை வைத்த பின்பு விரிவாக பேசுகின்றோம் என்றும் தெரிவித்தார்.மக்கள் இதை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்
திமுக இந்த டேப் பொய் என சொல்லட்டும்., இதில் சம்பத்தப்பட்டவர்கள் முதலில் இதற்கு
பதில் சொல்ல வேண்டும் என்றும் பதிலளித்தார்.
இதேபோல் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது மக்கள் மாநில அரசு மீது பெரும்பாலும் குற்றசாட்டு சொல்லி இருப்பதாகவும்
83 சதவீதம் மாநில அரசு தொடர்பாகவும், 17 சதவீதம் மத்திய அரசு தொடர்பாகவும் மனுக்கள் வந்துள்ள சூழலில் பெரும்பாலும் மாநில அரசு தொடர்பான மனுக்கள் என்பதால் அதை நகர்த்துவதில் சிரமம் இருந்தாலும் தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 30 சதவீதம் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இளவு காத்த கிளி குறித்த விமர்சனம் தொடர்பாக பேசிய அவர்,அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை என்றும் கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி்.
முதல்வர் கனவில் நான் இல்லை எனவும் பதிலளித்தார்.துக்ளக் விழாவில் தானும், சசி தரூரும் பங்கேற்ற போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி முதல்வர் பதவி குறித்து அவரது கருத்தை பேசியதாகவும் பா.ஜ.கவில் முதல்வராக
என்னை விட முழு தொகுதி இருக்க கூடியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.,இவரை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளர் இருக்கின்றனர் என அதிமுக கட்சியினரால் சொல்ல முடியுமா ? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, பா.ஜ.கவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. மற்ற கட்சிகளை போல முழு கட்சியும் ஒற்றை தலைமைக்கு பின்பு இல்லை என்றும் ஒரு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி என்று சொல்கின்றனர்.,ஒரு தலைவரை தவிர முதல்வர் நாற்காலியில் அமர தகுதியானவர் யாரும் இல்லையா? என்றும் இதே கேள்வி கேட்கும் அவர், முதல்வராக வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுக்கலாமே.' எனவும் பதிலளித்தார்.
மேலும், எவ்வளவு செலவு செய்தாலும் இயற்கையாக ஒருவர் தலைமைக்கு வர வேண்டும் என்றும் உதயநிதியை செயற்கையாக உருவாக்குகிறார்கள் என்றும் பாஜக செயற்கையாக இல்லாமல் இயற்கையாக தலைவர்களை உருவாக்கும் கொள்கை கொண்ட கட்சி என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை பாஜகவின் பக்கம் மிகப்பெரிய எழுச்சி இருக்கும் எனவும் மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது இது உண்மையாக இருக்கும் எனவும் கூறினார்.கூட்டன்இ குறித்த கேள்விக்கு,இன்னும் தேர்தல் அறிவிப்பு வரவில்லை எனபதால் தேர்தல் கூட்டணி குறித்து அதற்கான குழு பார்த்து கொள்வார்கள் என்றார்.மேலும் 32 மாத ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் சொல்ல திமுக வால் முடியவில்லை எனவும் 1950ல் இருந்து மாநில உரிமையை தவிர வேறு எதையாவது திமுக பேசி இருக்கின்றதா என்றும் மாநில உரிமையை மீட்டு எடுப்பது என்பது திமுகவை பொறுத்தவரை வெறும் வாய்சொல் தான் என்றும் கூறிய அண்ணாமலை 2ஜி தொடர்பாக ஆ.ராசா உரையாடல் டேப்பை தொடர்ந்து அடுத்த மூன்று வாரங்களில் அனைத்து டேப்புகளும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்..