எம்.எஸ்.எம்.இ., தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் - காட்மா

published 1 year ago

எம்.எஸ்.எம்.இ., தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் - காட்மா

கோவை: பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பிரச்சனைகள், அதன் வளர்ச்சி  இல்லாதது வருத்தம் அளிப்பதாக காட்மா சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் உரகத் தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2024 25 ம் நிதி ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்குவதற்காக ஒரு லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். தொழில் நுட்ப புத்தாக்க திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்த நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகப்படியாக நிதி ஒதுக்கப்படும் மற்றும் புதிதாக எவ்வித வரிவிதிப்புகளும் இல்லாதது போன்ற அறிவிப்புகளை காட்மா சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்

அதே நேரத்தில் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்கள் தனது அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME முக்கிய பங்காற்றுகிறது என்று அறிவித்திருந்தாலும் கூட, MSME துறை வளர்ச்சி பெறும் வகையில் வங்கி வட்டி விகிதம், 

பரிவர்த்தனை கட்டண குறைப்பு இல்லாதது. மூலப் பொருட்கள் விலை குறைப்பதற்கான அறிவிப்புகள் மற்றும் நாடு முழுவதும் ஒரே விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய துறை ரீதியான எவ்வித அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe