கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்!

published 1 year ago

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்!

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார் பாடி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் அளித்த மனுவில்,
கோவை- மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் தந்தை, அவரது 3 வயது மகனும் இறந்தனர். இதேபோன்று தொடர்ச்சியாக தனியார் பேருந்து டிரைவர்கள் அதிவேகமாக வாகனத்தை இயக்கியும், அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரனை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருப்பவர்களை அச்சுறுத்தும் விதமாகவும்,  எந்தவித சாலை விதிகளையும் பின்பற்றாமல் வாகனத்தை இயக்குவதால் விபத்து  ஏற்படுகிறது.

இதனைக் குறைக்கும் விதமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நலனை கருத்தில் கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரனை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் பயன்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தொடர் வாகன தணிகை மூலம் முற்றிலுமாக வாகனத்தில் இருந்து நீக்கி அபராதம் விதித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe