கோவையில் உள்ள காவல் நிலையங்களில் ஜிம்- கமிஷனர் தகவல்..!

published 1 year ago

கோவையில் உள்ள காவல் நிலையங்களில் ஜிம்- கமிஷனர் தகவல்..!

கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  காவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்திற்கான 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காவல் நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக ரத்தினபுரி புதிய காவல் நிலையத்தில் நடைபெற்ற  கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், புதிய காவல் நிலையம் மூலமாக பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கமுடியும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,சுமார் 12,500 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய காவல் நிலையம் ஒருங்கிணைந்த காவல் நிலையமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் இந்த கட்டிடத்தில் ஒருங்கே  நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியதுடன், காவலர்களுக்கான அறைகள், அதிகாரிக்களுக்கான அறைகள் மற்றும் கூட்ட அறை என தனித்தனியே சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும் கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே காவலர்களுக்கான யோகா பயிற்சி வாரம் இரண்டு முறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அது மேலும் விரிவு படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். கோவை மாநகர பகுதிகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2000 சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe