அவரால் ஈழம் அழிந்தது; சீமான் மீது கோவையில் ராஜீவ் காந்தி சரமாரி குற்றச்சாட்டு!

published 1 day ago

அவரால் ஈழம் அழிந்தது; சீமான் மீது கோவையில் ராஜீவ் காந்தி சரமாரி குற்றச்சாட்டு!

கோவை: கோவை கொடிசியா நேரு நகர் பகுதியில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் சீமான் நிலைப்பாடு தமிழ் ஈழம் குறித்து அவர் வெளியிட்டது எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீமான் என்கின்ற போலி பிம்பம் வன்மத்தாலும் பொய்களாலும் கட்டப்பட்டுள்ளது என்பது தற்பொழுது தமிழ் சமூகத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சீமானின் பொய்களை நம்பி வாழ்க்கையை இழந்த எண்ணற்றவர்களில் நானும் ஒருவன் என தெரிவித்த அவர் ஈழம் என்கின்ற அரசியல் 1970க்கு பிறகு பிரதான அரசியலாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தை அறிவிக்கும் பொழுது எந்த அமைப்பும் அழித்து ஒழிக்கப்படவில்லை தமிழ் ஈழத்திற்கு திராவிட இயக்க தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் அங்கு சென்று வந்தாலும் அந்த மண் அழியப்படவில்லை யாராலும் காட்டிக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர் சீமான் போய் வந்த பிறகு ஒட்டுமொத்தமாக தமிழீழ மண் அழிக்கப்பட்டு விட்டதாக குற்றசாட்டுகளை முன்வைக்க விரும்புவதாக தெரிவித்தார்.

ஆறு ஏழு மாதங்களாக தமிழீழத்தில் தங்கி இருந்த சீமான் தமிழீழ விடுதலை புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள், யாரெல்லாம் தளபதிகள் குறித்து என்பது உளவு பார்த்து சிங்கள அரசிற்கும் பன்னாட்டு அரசிற்கும் தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறோம் என தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தனியார் தொலைக்காட்சிகள் அளித்த அறிக்கை என்பது இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள சீமான் பிரபாகரன் இருக்கின்ற புகைப்படம் தன்னால் எடிட் செய்யப்பட்டது என்று கூறியதை குறிப்பிட்ட அவர் சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள் கூட சந்திக்கவில்லை என்று ராஜ்குமார் கூறுவதாகவும் இது சம்பந்தமாக நிலவி வரும் விஷயங்கள் அச்சத்தையும் தமிழ் தமிழீழம் என்று இன்று உணர்வுடன் இருக்கும் எங்களை சீமான் ஏமாற்றி இருக்கிறார் என்று எண்ணப்படுகிறது என கூறினார்.

அடிப்படையில் தமிழீழத்தை அழிப்பதற்கும் தமிழீழ ஆதரவு சமூக நீதி ஆதரவு ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்கு சீமான் என்கின்ற மனிதர் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வருகின்ற பொழுது கவலை அழிப்பதோடு மட்டுமல்லாமல் யாரை நம்புவது என்ற சிக்கலையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். திரைப்பட சூட்டிங்கில் எடுக்கப்பட்ட துப்பாக்கி புகைப்படத்தை வைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட பொழுது எடுத்த படம் என்று பொய் சொல்ல முடிந்திருக்கிறது என்றால் சீமானின் அரசியல் வருகையை சந்தேகப்படுவது உடன் தமிழீழ அரசியலை தமிழ்நாட்டிலும் உலக அளவில் மழுங்கடிக்க செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். ஈழத்திலிருந்து வந்த அவர் அங்கு என்ன நடந்தது என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை எனவும் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசி கைது செய்யப்பட்ட பிறகு 2008 ஆம் ஆண்டு இறுதியில் கோவை சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஈழ ஆதரவிற்காக போராடாமல் போராட்ட களத்திற்கு செல்லாமல் மாயாண்டி குடும்பத்தார்  படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாக சாடினார். முத்துக்குமார் இறப்பிற்கு வாருங்கள் என்று அழைத்த பொழுது எங்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்தார்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்று தெரிந்தும் இளைஞர்களிடம் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பிரபாகரனின் இறப்பை மறைத்து தமிழகத்தில் எண்ணில் அடங்காத இளைஞர்களின் அரசியலை சிதைத்திருக்கிறார் என தெரிவித்தார். சீமானுக்கு தனி ஈழம் குறித்து அக்கறை இல்லை எனவும் தமிழ்நாடு அரசியலில் தனக்கு வாக்களித்தால் ஈழத்தை வாங்கி விடுவேன் என்று தான் கூறி வந்ததாகவும் அது பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துவது என தெரிவித்தார். சட்டரீதியாக பன்னாட்டு அமைப்புகளுடன் முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டு தமிழீழத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறார் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடைக்கலமாக இருந்து கொண்டு தமிழீழ விடுதலை புலிகள் போராளிகளை காட்டி கொடுத்திருப்பதாகவும் அதற்கு சிரஞ்சீவி என்ற ஒருவரை குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர் அவரைக் காட்டிக் கொடுத்தவர் சீமான் தான் எனக கூறினார். தமிழ் தமிழர் உரிமை என்று பேசியதை தெலுங்கு கன்னடம் எதிர்பார்க்க மாற்றி இளம் குறித்து பேசியவர்களை பேச வேண்டாம் என்று தான் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர் அவர் என கூறினார். தற்பொழுது அவர் ஆர்எஸ்எஸ் கைக்கூலியாக இருப்பதாகவும் சாடினார்.

சீமான் அவர் வைத்துள்ள whatsapp ஸ்டேட்டஸ் என்று ஒரு Screenshot நகலை காண்பித்த அவர், அதில் " சமஸ்கிருதத்த திணிப்பை விட இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு ஆபத்தானது" என்று இருப்பதாக கூறினார். சமஸ்கிருதம் இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு ஆபத்தானது என்று சீமான் கூறுகிறார் என்றால் ஆர் எஸ் எஸ் ஐ விட ஆபத்தானவர் எனவும் ஆர்எஸ்எஸின் கைக்கூலியாக மட்டுமல்லாமல் அனைத்தையும் காட்டிக் கொடுக்கின்ற ஆளாக இருப்பதாகவும் தெரிவித்தார். இட்டிலிக்குள் ஆமைக்கறியை வைத்து கொடுத்தார் அதனை ஊட்டி விட பிரபாகரன் கூறினார் மானை சூடுவதற்கு பிரபாகரன் கூறினார் என்றெல்லாம் சீமான் கதை விட்டதாகவும் இது அந்த அமைப்பை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக தெரிவித்தார்.

போராட்ட களத்திற்குச் சென்ற அவர் காதல் கொண்டேன் உல்லாச பயணமாக சென்று இருந்தேன் என்றெல்லாம் பேசுவது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை கேள்விக்குறியாகி இருப்பதாக சாடினார். அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய ஒரு அசிங்கம் சீமான் என கடுமையாக சாடிய ராஜீவ் காந்தி ஈழப் போராட்டம் சீமானால்தான் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் நான் தான் பிரபாகரனால் அடையாளம் காணப்பட்டவர் என்று மனநோய்க்கு உள்ளாகி பொய்யை பேசி இளைஞர்களை போராட விடாமல் செய்து ஈழம் என்கின்ற அரசியலையே தற்பொழுது காணாமல் ஆக்கியிருக்கின்றார் என குற்றம் சாட்டினார்.

ஈழத்தில் இருந்து பணம் வருகிறது என்று சீமான் கூறுவதெல்லாம் பொய் எனவும் அங்குள்ள அகதிகளிடம் சுரண்டி சீமான் வாழ்ந்திருப்பதாக சாடினார். பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது சில நிமிடங்கள் தான் என்று கூறப்படும் நிலையில் சில வீடியோ காட்சிகள் சந்தோஷ இடம் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் வெளியில் வரும் என தெரிவித்தார்.

சீமான் இன துரோகம் செய்துள்ளதாகவும் மக்களின் போராட்டத்தை அவரது சொந்த சுயலாபத்திற்காக நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் டெபாசிட் கூட வாங்க முடியாது என தெரிவித்த அவர், ஈரோட்டில் திமுகவினர் பெரியாரை முதல் படமாக வைத்து தான் வாக்கு கேட்டு வருகிறார்கள் எனவும் யோக்கியதை இருந்தால் பிரபாகரனின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்டு இருக்க வேண்டுமா இல்லையா என கேள்வி எழுப்பினார். இன்னும் கூடிய விரைவில் தான் பிரபாகரன் என்று கூறும் மனநிலைமைக்கு கூட சீமான் வந்து விடுவார் என தெரிவித்தார். போருக்குப் பிறகு இத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்ற ஆவணத்தை யாவது காட்டுங்கள் என கூறியவர் அதனை ஆதரித்தவர்களை துரோகிகள் என்று சீமான் கூறுவதாக தெரிவித்தார்.

சீமான் அவிழ்த்து விடும் கதைகளில் நாம் தோற்று விடுவோம் என்பதற்காகவே அதிகமான பெரியா உணர்வாளர்கள் முற்போக்கு வாதிகள் இந்த அசிங்கத்துடன் போராட வேண்டாம் என ஒதுங்கிப் சென்றுவிடும் அந்த வேலையை சீமான் செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கரை புரியல தொடுவார் என்று நினைப்பதாகவும் சீமானுக்கு எந்த ஒரு புத்தகமும் படிக்கின்ற பழக்கம் இல்லை என தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் வைக்காத குற்ற சாட்டுகளை அவர் முன் வைக்கிறார் என்றால் அவரை இங்கு இருந்து இயக்குவதற்கு ஏதோ ஒரு அமைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சீமானை செந்தமிழ் சீமான் என்று குறிப்பிடுவார்கள் என்பதை தெரிவித்த அவர் செந்தமிழ் என்றால் அவரைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை பேசுவது தான் எனவும் உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசுகின்ற பன்பற்ற மனிதர் அவர் என சாடினார். அறம் என்பது சீமானுக்கு இல்லை எனவும் திட்டமிட்டு தமிழர்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட கைக்கூலி, பன்னாட்டு உளவுத்துறையின் கையாள் என்று குற்றம் சாட்டினார். பிரபாகரனுடன் இருந்தவர்களை எல்லாம் துரோகி என்று அன்னிய படுத்திவிட்டு தான் மட்டும் தான் யோக்கியன் என்று கூறிக்கொண்டு இருக்கிறார் எனவும் அந்த யோக்கியன் இனத்திற்காக என்ன செய்திருக்கிறார் என்று தான் எங்களுடைய கேள்வி என தெரிவித்தார்

சீமான் செய்வது பொய் அரசியல் அவருடன் இனி செயல்பட முடியாது என்றுதான் பலரும் திமுகவில் சேர்கிறார்கள் என தெரிவித்த அவர் நாம் தமிழர் கட்சிக்கு வரக்கூடியவர்களிடம் பேசி அவர்களை திமுகவிற்கு அழைத்து வரக்கூடிய பணிகளை நான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் என தெரிவித்தார். சீமான் பாஜகவால் இயக்கப்படுகிறார் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் எனவும் தெரிவித்தார். திமுகவில் முன்னாள் தலைவர்கள் அவர்கள் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க இருப்பதாகவும் சீமானுக்கு மாநில அங்கீகாரம் வாங்கி கொடுத்தது விஜய் தான் எனவும் தற்பொழுது விஜய்க்கு ஆதரவு வருவதால் விஜயை கொச்சையாக பேசி வருவதாகவும் தற்பொழுது பாஜகவில் சாஃப்ட் இந்துத்துவா ஓட்டுகள் நமக்கு வரும் என்று சீமான் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் பெரியார் குறித்து சீமான் அவதூறு பேசிய பிறகு எந்த ஒரு காட்டமான அறிவிப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் இருந்து வரப்படவில்லை என தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் ஆசானை கொச்சைப்படுத்துகின்ற பொழுது எடப்பாடி போன்றவர்கள் விஜய் போன்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பது அயோக்கியத்தனம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe