மின் பிரச்சினையா? இதோ மின் வாரியத்தில் புகார் அளிக்க செயலி!

published 11 months ago

மின் பிரச்சினையா? இதோ மின் வாரியத்தில் புகார் அளிக்க செயலி!

கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்வாரியில் சம்பந்தப்பட்ட புகார்களை தெரிவிப்பதற்கு செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகைமான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின்வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை அளிப்பதற்கு TANGEDCO Mobile App அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை கோவையை சேர்ந்த கு.வடமதுரை, சீரநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் மின்தடை, மின்மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம், மின்னழுத்த ஏற்ற இறக்கம், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் திருட்டு, மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்து, மின் கம்பி அறுந்து விழுதல் உள்ளிட்ட புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு மென்பொருள் வாயிலாக தெரிவித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe