கோவையில் சுட்ரிக்கப்போகுது வெப்பம்! வானிலை முன்னறிவிப்பு!

published 11 months ago

கோவையில் சுட்ரிக்கப்போகுது வெப்பம்! வானிலை முன்னறிவிப்பு!

கோவை: கோவையில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை என்றாலே குளுகுளு சீதோசன நிலைதான் மற்ற மாவட்ட மக்களுக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குள் கோவையின் வானிலை மாறி இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் வெய்தினால் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை 34 டிகிரி ஆக இருந்த வெப்பம் இன்று 35 டிகிரி வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் இதே வெப்பநிலை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 7,8 ஆகிய தேதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும், தங்கள் சுற்றத்தாருக்கு இச்செய்தியை பகிரவும் நியூஸ் க்ளவுட்ஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe