வெள்ளியங்கிரி மலையில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

published 11 months ago

வெள்ளியங்கிரி மலையில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

கோவை: வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற 22 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை பாத யாத்திரை செல்ல பிரசித்த பெற்ற ஆன்மிக தளமாக உள்ளது. தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலையில், சிவன் சுயம்பு வடிவத்தில் காட்சியளிக்கிறார். 

7 மலைகளைத் தாண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் மஹாசிவராத்திரியின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றம் துவங்குவர்.

இதனிடையே இந்தாண்டு மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறினர். சிவராத்திரி முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரை சென்று வரும் நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 22 வயது மகன் கிரண் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறினார்.

அவருக்கு வெள்ளியங்கிரி ஒட்டன் சமாதி என்ற 5வது மலை ஏறும் போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி வேலூர் மாவட்டம் சோளிங்கரையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்ற இளைஞர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பலியான நிலையில்,தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe