பிரதமர் வருகையை ஒட்டி கோவையில் இந்த பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை...

published 11 months ago

பிரதமர் வருகையை ஒட்டி கோவையில் இந்த பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை...

கோவை: பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளதை ஒட்டி கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் இன்று முதல் பல்வேறு பகுதிகள்  தற்காலிக RedZone பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

18-ஆம் தேதி கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலை ஹவுஸிங் யூனிட் அருகில் இருந்து ஆர் எஸ் புரம் வரை பிரதமர் மோடியின் Road Show நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று(15.03.2024) முதல் 19.03.2024 தேதி வரை கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் தற்காலிக Red Zone பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. 

எனவே இந்த பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe