புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி துவங்குகிறது- காரணம் இது தான்...

published 11 months ago

புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி துவங்குகிறது- காரணம் இது தான்...

கோவை: அரசுச் செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உத்திரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை கண்டறிவதற்காக கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கான இப்சோஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தை தழிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் நியமித்துள்ளது.

இந்த நிறுவனம், துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆய்வு பணி நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்பை உறுதி செய்ய அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை எடுத்துச்செல்ல ஆதரவு கேட்டுக்கொண்டனர்.

கணக்கெடுப்பு குழு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தும். மேலும் அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்றும் ஆய்வு செய்யும்.

சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி கள ஆய்வு மூலம் மேற்கொள்ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ள துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe