இன்னும் அடுப்பே பத்தவைக்கல தம்பி; அண்ணாமலை Vs அமைச்சர் ராஜா! - வீடியோ

published 10 months ago

இன்னும் அடுப்பே பத்தவைக்கல தம்பி; அண்ணாமலை Vs அமைச்சர் ராஜா! - வீடியோ

கோவை: கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜக செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, . கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளார்கள், ஊரை சூடேற்றியதுதான் மிச்சம் . குழுமையாக அமைதியாக இருக்ககூடிய ஊரை  இரண்டு டிகிரி, மூன்று டிகிரி வெப்பநிலையை ஏற்றி இருக்கிறார்கள் என பேட்டியளித்திருந்தார்.


 

இந்நிலையில் சூலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் ஒன்றும்  செய்யவில்லை, அதிமுக எதுவும் செய்யவில்லை. 
 

அப்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழக மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் என்பதால் தான் 3 டிகிரி 5 டிகிரி கதையெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கெல்லாம் தேர்தல் சூடு தாங்காது, தேர்தல் சூடு என்றால் என்னவென்று தெரியாது. இன்னும் அடுப்பே பற்றவைக்கவில்லை தம்பி. அதுக்குள்ள சூடுது சூடுதுன்னு  என்று சொன்னால் என்ன செய்வது என பேசினார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/shorts/PuhBpf0heWI

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe