‘புஷ்பா 2’ டீசர் ரெடி... வெளியான அதிகாரபூர்வ தகவல்!

published 10 months ago

‘புஷ்பா 2’ டீசர் ரெடி... வெளியான அதிகாரபூர்வ தகவல்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றன. படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்திருந்தனர்.

பான் இந்தியா படமாக வெளியாகி சர்வதேச அளவில் 300 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்தது.  இந்த படத்தினால் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.

இந்த நிலையில் 'புஷ்பா தி ரூல்' என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டாம்  பாகம் தற்போது உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. 2ம்  பாகம் மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.  

இந்த படம்  ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் 8ம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளையொட்டி  படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe