விஜய் நிராகரித்த சூப்பர் ஹிட் படங்கள்..! என்னென்ன படங்கள் தெரியுமா?

published 10 months ago

விஜய் நிராகரித்த சூப்பர் ஹிட் படங்கள்..! என்னென்ன படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர்  விஜய். ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் தற்போது 'ட்விஸ்டுகளின்' மன்னனான வெங்கட் பிரபு இயக்கும் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளார். அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ளதால் திரைப்படத்தில் நடிக்க போவதில்லை என செய்திகள் வெளியாகி இருந்தன.

அதன்படி இவர் நடிக்க உள்ள கடைசி படம் தளபதி 69 எனக் கூறப்படுகிறது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார்.  இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தமிழ் சினிமாவில்  நடிகர் விஜய் நடித்த  பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதே போல் நடிகர் விஜய் நிராகரித்த சூப்பர்ஹிட் படங்களும்  ஏராளமாக உள்ளன. அப்படி விஜய் நிராகரித்து சூப்பர் ஹிட் ஆகி, அதில் நடித்த நடிகர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சில திரைப்பங்கள் பின்வருமாறு:

உன்னை நினைந்து, காக்க காக்க, அனேகன், முதல்வன், தீனா

பொன்னியின் செல்வன், சண்டைக்கோழி, ஆட்டோகிராஃப், சிங்கம்

ரன், தூள், உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி திரைப்படங்களை விஜய் தவறவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நிராகரித்த இந்த அனைத்து திரைப்படங்களும், அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள  நடிகர்களின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படங்களில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe