கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை-கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

published 10 months ago

கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை-கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு,  சேலம், ஈரோடு, வழியாக சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி (திருவனந்தபுரத்தில்) இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

. ரயில் எண்.06043 சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில் 2024 ஏப்ரல் 10, 17 & 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து 3.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

. ரயில் எண்.06044 கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து ஏப்ரல் 11, 18 & 25, 2024 ஆகிய தேதிகளில் 6.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

பெட்டிகள் : ஏசி 3-அடுக்கு பெட்டிகள்.

நிறுத்தங்கள்: அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனூர் மற்றும் கொல்லம்.

ரயில் நிலையங்களின் நேரங்கள்:

ரயில் எண்.06043 சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில்:

· (10, 17 & 24 ஏப்ரல், 2024 அன்று) 
ஜோலார்பேட்டை - 18.49 / 18.50 மணி; 
சேலம் - 20.38 / 20.40 மணி; ஈரோடு - 21.35 / 21.45 மணி; 
திருப்பூர் - 22.28 / 22.29 மணி; கோவை – 23.28 / 23.30 மணி.

ரயில் எண்.06044 கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்:

· (11, 18 & 25 ஏப்ரல், 2024 அன்று) 
கோயம்புத்தூர் - 02.42 / 02.45 மணி; 
திருப்பூர் - 03.30 / 03.31 மணி; ஈரோடு - 04.10 / 04.20 மணி; 
சேலம் - 05.07 / 05.10 மணி; 
ஜோலார்பேட்டை – 06.48 / 06.49 மணி.

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe